நாட்டில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது வரையில் எரிபொருள் விநியோகம் வழமைபோன்று இடம்பெறுவதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் மற்றும் கனிய எண்ணெய் மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொலன்னாவை முனையத்தில் இருந்து சுமார் 50 எரிபொருள் கொள்கலன் ஊர்திகளை, அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகம்
இதேவேளை லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் தகவலில், தற்போதைய நிலைமைக்கு மத்தியில் உச்சபட்ச எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுகிறது.
திருகோணமலையில் உள்ள எமது களஞ்சியங்களின் விநியோகப் பணிகள் உச்சபட்ச அளவில் இடம்பெறுகின்றன.
நாடளாவிய ரீதியில் உள்ள தங்களது எரிபொருள் நிரப்பு நிலையங்களில், உச்சபட்ச சேவையை வழங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri
