இன்று முதல் QR அடிப்படையில் எரிபொருள் விநியோகம்! வாகனங்களுக்கான எரிபொருள் அளவு குறித்து வெளியான தகவல்
புதிய இணைப்பு
இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் இன்றுமுதல்(15) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் வாகனங்களுக்கு வாராந்தம் ஒதுக்கப்பட்ட எரிபொருள் அளவு வாகன வகைகளுக்கான எரிபொருள் அளவுகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
பேருந்துகள் – 60 லீற்றர்
மோட்டார் சைக்கிள் – 5 லீற்றர்
வேன் – 40 லீற்றர்
மோட்டார் கார் – 15 லீற்றர்
லொறி – 200 லீற்றர்
வாகனங்கள் (Land Vehicles) – 25 லீற்றர்
முச்சக்கர வண்டி – 15 லீற்றர்
விசேட பயன்பாட்டு வாகனம் – 40 லீற்றர்
குவாட்ரிசைக்கிள் (Land Vehicles) – 5 லீற்றர் தேசிய உற்பத்தி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான வாகனங்களுக்கு தனிப்பட்ட எரிபொருள் விநியோக முறைமையும் நடைமுறைப்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இணைப்பு
இலங்கையிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (15.03.2026) முதல் நடைமுறைக்கு வருவதாக இலங்கையின் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
QR குறியீடு பெறும் முறை
இதன்படி, http://fuelpass.gov.lk என்ற இணையத்தளத்தின் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.
அதில் முதலில் உங்கள் அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், உங்கள் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் ரகசிய இலக்கத்தை (OTP) பதிவுசெய்ய வேண்டும்.

அந்த ரகசிய இலக்கத்தை பதிவு செய்வதன் மூலம் உங்கள் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
அதனைத் தொடர்ந்து, உங்கள் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர், உங்கள் வாகனத்திற்கான விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
வழங்கப்படும் தகவல்கள் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் பதிவு நிறைவு செய்யப்படும்.
இறுதியாக, உங்களுக்கு தனிப்பட்ட QR குறியீடு (QR Code) வழங்கப்படும். அந்த QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், அதை உங்கள் தொலைபேசிக்கு பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும் முடியும்.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri