நாட்டிலுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அடுத்து வரும் இரு நாட்களில் இரண்டு எரிபொருள் தாங்கிய கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை வரும் எரிபொருள் கப்பல்கள்
எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தற்போதுள்ள நெரிசல் 100 வீதம் இல்லாவிட்டாலும் ஓரளவு குறையும் என அமைச்சர் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாயம், மீன்பிடி போன்றவற்றுக்கு ரேஷன் முறை மூலம் முன்னுரிமை வழங்குவதன் மூலம் நெருக்கடியை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்
எனினும் எரிபொருள் குவிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் கூறினார்.