கைகொடுத்தது கொழும்பு பட்ஜட்! அநுர தரப்பிற்கு கிடைத்த வெற்றி
கொழும்பு மாநகர சபையின் (CMC) வருடாந்த வரவு செலவுத் திட்டம் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 கவுன்சிலர்கள் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில்
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு முதன்முதலில் டிசம்பர் 22 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, 60 உறுப்பினர்கள் அதற்கு எதிராகவும், 57 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெற்றது மற்றும் அதன் மேயர் வேட்பாளர் Vraie Cally Balthazar 61 வாக்குகளைப் பெற்று கொழும்பு மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |