எரிபொருள் விநியோகத்தின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை
தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட பலர் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கொலன்னாவ எண்ணெய் சேமிப்பு முனையத்தை பலவந்தமாக முற்றுகையிட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பலர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் உரிய விசாரணை நடத்துமாறு அமைச்சர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அமைச்சரின் கோரிக்கை
கடிதத்தின் மூலம் அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில்,இவ்வாறான பாதுகாப்பற்ற நிலை மீண்டும் ஏற்படாத வகையில் அனைத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக வலயங்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும்.
கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவ பெற்றோலிய முனையத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பான வலயத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்து, அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்பட்டுள்ள எரிபொருள் விநியோகத்தை முடக்கியுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரம்
நாட்டின் பொருளாதாரம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அன்றைய தினம் நிறுவனத்திற்கும், விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட்ட நஷ்டத்தை கணக்கிட்டு குறித்த சம்பவத்திற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.”என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
