மாரவிலவில் பிடிப்பட்ட 5 லட்சம் ரூபா பெறுமதியான எரிபொருள்
சிலாபம் மாரவில தும்மோதர பிரதேசத்தில் சட்டவிரோதமாக எரிபொருளை சேகரித்து களஞ்சியப்பத்தி வைத்திருந்த இடம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 900 லீட்டர் டீசலை கைப்பற்றியுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மணல் விற்பனை செய்யும் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல்

இவ்வாறு கைப்பற்றிய டீசலின் பெறுமதி சுமார் 5 லட்சம் ரூபாய் என பொலிஸார் கூறியுள்ளனர். மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேற்கு தும்மோதர பிரதேசத்தில் மணல் விற்பனை செய்யும் இடம் ஒன்றில் டீசல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
சம்பவம் குறித்து மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எரிபொருளை சட்டவிரோதமாக சேகரித்து அதிக விலைக்கு விற்கும் நபர்கள்

நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சிலர் சட்டவிரோதமாக எரிபொருளை கொள்வனவு செய்து, களஞ்சியப்படுத்தி, அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறிந்து பொலிஸார் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam