எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் விபத்து: கசிந்த டீசலை அள்ளிச்சென்ற பொதுமக்கள்
ஹப்புத்தளை – பத்கொட பகுதியில், எரிபொருள் கொள்கலன் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்றைய தினம் (06.05.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் கொள்கலன் ஒன்று, சுமார் 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் கொழும்பில் இருந்து ஹப்புத்தளை நோக்கிப் பயணித்துள்ளது.
இதன்போது வீதியை விட்டுவிலகிச் சென்ற எரிபொருள் கொள்கலன் வாகனம், அருகில் உள்ள வீடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொள்கலனில் கசிவு
இச்சம்பவத்தில் கொள்கலன் வாகனத்தின் உதவியாளர் காயமடைந்து பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்தினால், குறித்த வீட்டுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டிலுள்ளவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டப்படுகின்றது.
இந்த விபத்தினால், குறித்த டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதையடுத்து, அதிலிருந்து டீசல் வெளியேறுவதாகவும், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவானோர் அதனை நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.





நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




