எரிபொருள் விலை அதிகரிப்பு - பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட, பேருந்து கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02.05.2026) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்தது.
இந்த நிலையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வின் தாக்கம்
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு மேலதிக சுமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையெனில் எதிர்காலத்தில் பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri