அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு! மறுஅறிவித்தல் வரை எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை, 2026 மார்ச் 01ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலைகளின் அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை அறிவித்துள்ளார்.
எரிபொருள் விலை பலமுறை திருத்தம்
இதன்படி, ஏனைய அனைத்துக் கொடுப்பனவுகளையும் மறு அறிவித்தல் வரை அதே விகிதத்தில் பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த காலப்பகுதியில் மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக இலங்கையின் எரிபொருள் விலைகளும் பலமுறை திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri