பிரதமர் உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மாதிரி செயல்
பிரதமர் ஹரிணி அமரசூரிய உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தக் கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்தத் தகவலை நாடாளுமன்ற உதவிப் பொதுச் செயலாளர் ஹன்ச அபேரத்ன, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, 13 பேர் மார்ச் முதல், 16 பேர் ஏப்ரல் முதல், ஏனையோர் அடுத்தடுத்த மாதங்களில் இருந்தும் இந்தச் சலுகையை நிறுத்துமாறு கோரியுள்ளனர்.
எரிபொருள் கொடுப்பனவு
அமைச்சர்களான இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த செப்டெம்பர் மாதமே இந்த கொடுப்பனவை நிராகரித்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.
அதேநேரம், தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 419.76 லீட்டர் டீசல் எரிபொருள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




