நண்பன் வெளிநாடு செல்வதற்காக உயிரை தியாகம் செய்த மற்றுமொரு நண்பன்
மாத்தளையில் கடன் பணம் தொடர்பில் நண்பர்கள் இருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது உற்ற நண்பர் சைப்ரஸ் நாட்டில் தொழிலுக்கு செல்வதற்காக வேறு ஒரு நபரிடம் பெற்றுக் கொடுத்த கடன் பணத்தை மீள கேட்ட போது அதனை வழங்க முடியாத இளைஞன் உயிரை மாய்த்துள்ளர்.
இந்நிலையில் கடன் கொடுத்தவர் பணம் வழங்காதமையினால் கோபத்தில் மற்ற நண்பரை திட்டியதால் மற்றுமொரு நண்பரும் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டில் பணி
மாத்தளை ஹிக்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தனது நண்பரின் வெளிநாட்டில் பணிபுரியும் கனவை நிறைவேற்றுவதற்காக கடன் பெற்று கொடுத்தள்ளார்.
வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் தனது நண்பருக்காக 3 இலட்சம் ரூபா கடனாக பெற்றுக் கொடுத்துள்ளார். அதனை மீண்டும் பணத்தைக் கேட்டபோது, பணத்தைத் திருப்பித் தர முடியாததால் உயிரை மாய்த்துள்ளார்.
அதற்கு உதவிய நண்பரும் பணம் வழங்க முடியாமல் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
