பாரிஸில் வெடித்தது பெரும் போராட்டம்!! பிரெஞ்சு காவல்துறை அதிரடி நடவடிக்கை
பாரிஸில் நூற்றுக்கணக்கான மக்கள் தெஹ்ரான் தூதரகத்திற்கு அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க பிரெஞ்சு காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் லண்டனில், ஈரானின் இங்கிலாந்து தூதரகத்தை பாதுகாக்கும் தடைகளை உடைக்க முயன்ற எதிர்ப்பாளர்களுடன் அதிகாரிகள் மோதலில் ஈடுபட்டதால் பொலிஸார் பலரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய குடியரசிற்கு மரணம் என்று முழக்கம்
கடந்த வாரம் ஈரானின் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மஹ்சா அமினியின் மரணத்தை தொடர்ந்து ஈரானில் வெடித்துள்ள போராட்டங்களுக்கு ஒற்றுமையைக் காட்டவும் பாரிஸில் போராட்டக்காரர்கள் இரண்டாவது நாளாக ஒன்று கூடினர்.
தலைநகரின் மையத்தில் உள்ள ட்ரோகாடெரோ சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் அமைதியாக தொடங்கியது. சில ஆர்ப்பாட்டக்காரர்கள் "இஸ்லாமிய குடியரசிற்கு மரணம்" என்று முழக்கங்களை எழுப்பினர்.
இதன்போது எதிர்ப்பாளர்கள் ஈரானிய தூதரகத்தை அணுக முயன்றபோது முழு கலக எதிர்ப்பு கவச வாகனங்களின் ஆதரவுடன் எதிர்ப்பாளர்களின் பாதையைத் பொலிஸார் தடுத்தனர். போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
சாலைத் தடுப்பை உடைக்க முயற்சி
கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்யப்பட்டதை அறிக்கை ஒன்றின் மூலம் பாரிஸ் பொலிஸார் உறுதிப்படுத்தினர். பல சந்தர்ப்பங்களில் போராட்ட குழுக்கள் ஈரானிய தூதரகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பை உடைக்க முயன்றன.
இதனையடுத்து அவர்களைத் தடுக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 4,000 பேர் கூடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளர்ச்சிக்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.