பிரான்ஸ் கடற்படையின் அதிரடி..! ரஷ்யாவின் 5வது எண்ணெய் கப்பல் பறிமுதல்
உக்ரைன் மீதான போரின் காரணமாக ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை ஏமாற்றி, மசகு எண்ணெயைக் கடத்துவதற்காக மொஸ்கோ பயன்படுத்தி வரும் மர்மக் கப்பற்படையின் ஒரு பகுதியாக இருந்த ரஷ்ய எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்றை பிரான்ஸ் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை மத்தியதரைக் கடலில் உள்ள சிசிலி தீவுக்கு அருகே இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு கடற்கொள்ளை செயல்
இந்த நடவடிக்கை மூலம் ரஷ்யாவின் ஐந்தாவது நிழல் உலக எண்ணெய் கப்பலை பிரான்ஸ் முடக்கியுள்ளது.

இதற்கிடையில், பிரான்சில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இது பிரான்ஸ் கடற்படையின் "மற்றுமொரு கடற்கொள்ளை செயல்" என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.