யாழ். நகர சபை உப தவிசாளர் பதவி நீக்கத்திற்கு எதிராக போராட்டம் - ஆளுநருக்கு முடிவிற்கு தொடர் கண்டனம்
யாழ்.சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி நீக்கப்பட்டு உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று(26.05.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்தின் அடிப்படையில், நகர சபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோரை உப தவிசாளரின் பதவியை நீக்கியும், நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வட மாகாண ஆளுநர் வெளியிட்டுள்ளார்.
முழு நாள் கடையடைப்பு
இந்த நிலையில், ஆளுநரின் முடிவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நீதி கோரி சாவகச்சேரி வர்த்தகர்கள் கடைகளை அடைத்து, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.









மேலதிக தகவல் - கஜீ