ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு - தமிழர் பகுதியில் இடம்பெற்ற பாரிய கடத்தல் சம்பவம்
வவுனியாவில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(25.06.2026) வவுனியா - லக்சபானா வீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த காரில் கொண்டுவரப்பட்ட கஞ்சாவினை மற்றொரு முச்சக்கரவண்டிக்கு மாற்றமுற்றப்பட்ட போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கஞ்சா வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பிச் சென்றதாக கூறப்படும் இருவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மீட்கப்பட்ட 21கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தையும், முச்சக்கரவண்டியையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைத்து விசாரணை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
