இலங்கை வந்த பிரான்ஸ் பிரஜையால் ஏற்பட்ட குழப்ப நிலை
இலங்கையில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்த பிரான்ஸ் பிரஜையே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் ஐந்து பேரையும் வீடுகளில் வளர்க்கப்பட்ட இரண்டு நாய்களையும் கடித்துள்ளது.
இதயைடுத்து பிரான்ஸ் நாட்டவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
பெந்தோட்டை அங்ககொட பிரதேசத்தில் வசிக்கும் எரிக் மார்ஷல் பெர்னாட் கோல்மன் என்ற 84 வயதான பிரான்ஸ் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் 6 வயதுடைய கிரேடன் வகை நாயை செல்லப் பிராணியாக வளர்த்து வந்துள்ளதுடன், கடந்த 23ஆம் திகதி வீட்டில் இருந்து தப்பிச் சென்ற நாய் வீடுகளில் வளர்க்கப்பட்ட 3 நாய்களையும் 5 நபர்களையும் கடித்துள்ளது.
நாய் கடித்ததில் வீடுகளில் வளர்க்கப்பட்ட இரண்டு நாய்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.