திறைசேரி நிதித் திருட்டைத் தொடர்ந்து நிதி அமைச்சின் முக்கிய ஆவணங்கள் மாயம்
நிதி அமைச்சின் கணினி அமைப்பிலிருந்து பிரான்ஸ் நாட்டுடன் தொடர்புடைய கடன் மீளச் செலுத்தல் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி திருடப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஹேக்கர்களே (Hackers) இதிலும் தொடர்புபட்டிருக்கலாம் எனப் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
வார இறுதி ஆங்கில பத்திரிகையொன்று இந்த விடயம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

காணாமல் போன இந்த ஆவணங்கள் பிரான்ஸுக்கான கடன் தவணையைச் செலுத்துவது தொடர்பானவை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மற்றொரு பாரிய நிதி மோசடியைச் செய்யும் திட்டத்துடன் இந்தத் தரவுகள் திருடப்பட்டிருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட சைபர் தடயவியல் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (ERD) ஊழியர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த திணைக்களமே இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டாலர் கடன் மீளச் செலுத்தல் கொடுக்கல் வாங்கல்களைக் கையாண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri