பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் கடும் குளிரான காலநிலை ஏற்படவிருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி (13.09.2024) பிரித்தானியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 0°C க்கும் கீழே குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, லண்டன், மன்செஸ்டர், பார்ட் மற்றும் பிரிஸ்டல் ஆகிய நகரங்களில் அதிக வெப்பநிலை குறைவு எதிர்பார்க்கப்படுகிறது.
அவசர அணுகுமுறை
இந்த வானிலை பிரித்தானியாவில் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை உருவாக்கும் என பிரித்தானியாவின் பிற வானிலை ஆய்வுக்கூடங்கள் கூறியுள்ளன.
அத்துடன், இதன்போது பிரித்தானிய மக்கள் தமது பயணங்களை அவதானமாக முன்கூட்டியே திட்டமிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசு மற்றும் ஆட்சி அமைப்புகள் அவசர அணுகுமுறை திட்டங்களை உருவாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களில் பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
அத்துடன், இந்த மோசமான காலநிலையில் போது தொடருந்துகள் மற்றும் பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்துக்கள் தாமதமடையலாம் அல்லது நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தண்ணீர் குழிகள் உறையும் அபாயம் காரணமாக, நீர் வழங்கலில் சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அரசின் அறிவுரைகளை பின்பற்றுமாறு பிரித்தானிய மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri

UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
