13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ரணிலுக்கு சுதந்திர கட்சி ஆதரவு
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (25.07.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
உரிய பொறிமுறை அவசியம்
"ஜனாதிபதி தலைமையில் இன்று (26.07.2023) நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்கும்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு.
எனினும், பொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வது குறித்து உரிய பொறிமுறை அவசியம்.
சர்வகட்சி மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்கும். அரசால் முன்னெடுக்கப்படும் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும்." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
