அரசாங்கத்தில் இணைந்தவர்களை கட்சியில் இருந்து நீக்கும் சுதந்திரக்கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதலில் பதவிகளில் இருந்து நீக்கம்

முதல் கட்டமாக அவர்களை கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கி விட்டு, குற்றச்சாட்டு பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, கட்சியில் இருந்து நீக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட பேச்சுவார்த்தை ஒன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது வீட்டில் அண்மையில் நடைபெற்றதுடன் இதன் பேது இந்த விடயம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர ஆகியேர் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
அண்மையில் ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்ற லசந்த அழகியவண்ண, கட்சியின் பொருளாளராக பதவி வகிப்பதுடன் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகியோர் உப செயலாளர்களாக பதவி வகிக்கின்றனர்.
இவர்கள் இந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam