விவசாயிகளின் போராட்டங்களின் பின்னணியில் சுதந்திரக்கட்சி! - இராஜாங்க அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு
விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களின் பின்னணியில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க (Roshan Ranasinghe) குற்றம் சுமத்தியுள்ளார்.
திம்புலாகல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
விவசாயிகளின் போராட்டங்களின் பின்னணியில் சுதந்திரக்கட்சியே செயற்படுகின்றது. தயவு செய்து உடலில் இருந்து கொண்டு காதை சாப்பிடும் செயலை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.
சேதன பசளையை பயன்படுத்தி ஒரு போகமேனும் விவசாயம் செய்ய வேண்டும். ஏதேனும் ஓர் காரணத்தினால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் விவசாயிகளுடன் இணைந்து நானும் வீதியில் இறங்கிப் போராடுவேன்.
விவசாயிகள் ஐம்பது வீதம் சேதன பசளையை கோருகின்றனர். இதன் மூலம் அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும் சேதன பசளை திட்டம் வெற்றியடைந்துள்ளமை அம்பலமாகின்றது.
எனவே ஒன்றிரண்டு போகங்கள் சேதன உரத்தைப் பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடுமாறு கோருவதாக ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்வரியை அசிங்கமாக பேசிய அன்புக்கரசி, கழுத்தை பிடித்த தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam