சுதந்திர கட்சி ஒன்றுபட வேண்டும்! தயாசிறி ஜயசேகர எம்.பி கோரிக்கை
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் (SLFP) பிளவுபட்டுள்ள அணிகள் ஒன்றுபட வேண்டும் என அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
"எனக்கு ஜனாதிபதியாக வேண்டும் என்ற கனவு இல்லை. எனக்கான தகுதி என்ன என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். கட்சியைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கம்.
கட்சியை கட்டியெழுப்புதல்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பது ராஜபக்ச குடும்பத்துக்கோ அல்லது பண்டாரநாயக்க குடும்பத்துக்கோ உரித்தானது அல்ல. அது மக்களின் கட்சி.
எனவே, பல அணிகளாகப் பிளவுபட்டுள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் கட்சியை மீளக் கட்டியெழுப்ப முடியும்.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கென நடைமுறையொன்று உள்ளது. அந்த விதிமுறைகளை கருத்தில்கொள்ளாமலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளார்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 4 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
