மொட்டு அணிக்கு அழைப்பு விடுத்த சுதந்திரக் கட்சி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியுள்ள அனைவரும் மீண்டும் தாய்வீடு திரும்ப வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான துமிந்த திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“மொட்டுக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களால் தான் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, சுதந்திரக் கட்சி என்ற தாய்வீட்டில் கதவுகள் திறந்தே உள்ளன.
தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம்..!
சுதந்திரக் கட்சி தயார்
கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் வரலாம். சுதந்திரக் கட்சியின் வாக்குகள்தான் தேசிய மக்கள் சக்திக்குச் சென்றுள்ளது.

தற்போது அரசியல் என்பது நாடாளுமன்றத்தில் இல்லை. அதற்கு வெளியில்தான் உள்ளது. எனவே, நாடாளுமன்றத்துக்கு வெளியில் சமூகத்தை அணிதிரட்ட சுதந்திரக் கட்சி தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri