விடுதலைப் போராட்ட திரைப்பட நடிகர் ஏரம்பு உயிரிழப்பு
விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றில் தனது கலைப் பங்களிப்பினை வழங்கிய மாணிக்கம் ஏரம்பு உயிரிழந்துள்ளார்.
அவர் இன்று (18) அதிகாலை வட்டுக்கோட்டை - துணவி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கலைப் பங்களிப்பு
1942ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறுவயது தொடக்கம் நடிப்பில் ஆர்வம் கொண்டு பல மேடை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களது போராட்டமானது வலுப்பெறுவதற்கு கலைப் பங்களிப்பினை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டம், மௌனிக்கப்பட்ட பின்னரும் கூத்துக்கள் உள்ளிட்ட நாடகங்களில் தனது பங்களிப்பை வழங்கி வந்ததுடன் அதுசார்ந்த கலைஞர்களுக்கு பல்வேறு வழிகாட்டல்களையும் செய்து வந்துள்ளார்.
அத்துடன் வெளிநாடுகளுக்கு சென்றும் தனது நாடகங்களை வழங்கி இரசிகர்களை கவர்ந்து வந்த ஒருவராக திகழ்ந்துள்ளார்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக தனது 81ஆவது வயதில் இன்றையதினம் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 19 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
