இலங்கைக்கு இலவச விசா திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு
இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தை அல்ஜீரியா அறிமுகப்படுத்தியுள்ளது.
அல்ஜீரியாவில் சுற்றுலா பயணிகளுக்கான பயண நடைமுறைகளை இலகுவாக்குவதன் மூலம் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்த புதிய இலவச விசா கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச விசா கொள்கை
மேலும் புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் வட ஆபிரிக்க நாடுகளின் சுற்றுலாத்துறை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கு கட்டணமற்ற விசா வழங்குவதற்கான லாவோஸ் மற்றும் தாய்லாந்தின் முடிவைத் தொடர்ந்து, அல்ஜீரியாவும் இலங்கை உட்பட்ட நாடுகளுக்கான இலவச வீசா முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில புதிதாக எளிதாக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, 55 நாடுகளின் குடிமக்கள் விசா கட்டணங்கள் இன்றி அல்ஜீரியாவுக்குப் பயணம் செய்யத் தகுதி பெற்றுள்ளனர்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
