வெனிசுலா மக்களுக்கு எலான் மஸ்கின் அறிவிப்பு
வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த நாட்டுக்கு இலவச இணைய சேவைகளை வழங்க எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெனிசுலா மக்களுக்கு ஸ்டார்லிங்க் Starlink சேவைகளை இலவசமாக வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்த அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் கடும் கட்டுப்பாடுகள்
வெனிசுலாவில் நீண்ட காலமாக அரசின் கடும் கட்டுப்பாடுகள், நாடு முழுவதும் அடிக்கடி நடைபெறும் இணைய துண்டிப்புகள் மற்றும் மந்தமான இணைய வேகம் ஆகியவை நிலவி வரும் சூழலில் ஸ்டார் லிங்கின் இந்த முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், கரீபியன் வான்வெளியைச் சுற்றி விதிக்கப்பட்டிருந்த விமானப் பயணக் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க போக்குவரத்துத் துறை செயலாளர் ஷான் டஃபி அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெனிசுலா இராணுவம்
இந்த முடிவு தொடர்பில் விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தாக்குதல்களால் வெனிசுலாவில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் பொதுமக்கள், வெனிசுலா இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam