பாடசாலை மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: கிடைத்தது அனுமதி
பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் (Sanitary Towel & Liner) வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.
இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகை சுமார் நான்கு மில்லியன் எனவும், அதில் வயதுக்கு வந்த மாணவிகள் சுமார் 1.2 மில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இலவச சுகாதார சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம்
அந்த மாணவிகளில், மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள் மற்றும் வறுமையில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கே இவ்வாறு இலவச சுகாதார சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி 800,000 மாணவிகளுக்கு இம்மாதம் முதல் ஆண்டுதோறும் இலவச சுகாதார சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கல்வி அமைச்சரின் முன்மொழிவுக்கு இவ்வாறு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 6 மணி நேரம் முன்
ஈஸ்வரியை அசிங்கமாக பேசிய அன்புக்கரசி, கழுத்தை பிடித்த தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
6 நாள் முடிவில் வெற்றிநடைபோடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam