நுவரெலியா - கிரிமிட்டியில் இலவச அரிசி விநியோகம்
நுவரெலியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நானுஓயா - கிரிமிட்டி பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் செயற்றிட்டம் நாடு பூராகவும் நடைபெறுகின்றது.
இலவச அரிசி செயற்திட்டம்
இதன் அடிப்படையில் நுவரெலியா, 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் இன்று (02.05.2024) இலவச அரிசி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலவச அரிசி வழங்கும் செயற்திட்டம் நுவரெலியாவில் சில பிரிவு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏனைய பிரிவுகளுக்கு தொடராக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுமென பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.