மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிமல் ரத்நாயக்க
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 3ஆம் திகதி, மாற்றுத்திறனாளிகள் Metro Bus பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (27) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்குமாறு Lanka Metro Transit (Pvt) Ltd நிறுவனத்திடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
பேருந்தில் இலவசப் பயணம்
குறித்த கோரிக்கைக்கு அனுமதி வழங்குவதற்கு நிறுவனத்தின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளதாக, அதன் தலைவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் Metro Bus பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 22 மணி நேரம் முன்
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri