கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட நிர்மாணத்திற்கான இடப்பற்றாக்குறை குறித்து ஆராய்வு
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட நிர்மாணத்திற்கான இடப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வது தொடர்பாக மட்டக்களப்பு மண்றேசா பகுதிக்கு விஜயம் செய்து பல்கலைக்கழக வளாகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆராய்ந்துள்ளார்.
குறித்த பகுதிக்கு நேற்று(02) விஜயம் செய்திருந்த நிலையில் அங்கு எழுந்துள்ள இடப்பற்றாக்குறை தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார்.
இதுவரை காலமும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட கற்கை நெறிக்காக உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினை எதிர்வரும் ஆண்டு முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான புதிய விடுதி வசதிகள், ஒன்றுகூடல் மண்டபம், விரிவுரை மண்டபம் போன்றவற்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மட்டக்களப்பு மண்றேசா பகுதியில் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் குறித்த பகுதியில் இடப்பற்றாக்குறையினை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடலையும் மருத்துவ பீட நிருவாகத்துடன் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
குறித்த களவிஜயம் மற்றும் கலந்துரையாடலின்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி குழந்தை நல வைத்திய நிபுணர் அஞ்சலா அருட்பிரகாசம், சிரேஷ்ட விரிவுரையாளர்களான வைத்தியர் அருளானந்தம் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் மார்க்கண்டு திருக்குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam