பேராதனை பல்கலைக்கழகத்தின் இலட்சினையை பயன்படுத்தி மோசடி
பேராதனை பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இலட்சினையை பயன்படுத்தி மாணவர்களை இணையவழிப் பாடநெறிகளில் ஈடுபடுத்தும் பாரியளவிலான மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக் உட்பட பல சமூக ஊடகங்கள் ஊடாக இணையவழி மோசடி இடம்பெறுவதாகவும், இவ்விடயத்தை விசாரிக்குமாறும் பல்கலைக்கழகம் பொலிஸ் கணினிப்பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்துக்கும் நேற்று (04) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக ஊடகப் பேச்சாளரும், பிரதி உபவேந்தருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் குறிப்பிட்டுள்ளார்.
மோசடி நடவடிக்கை
பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இலட்சினை சட்டவிரோதமாக முகாமைத்துவம், பொருளாதாரம், சமூக விஞ்ஞானம் மற்றும் உளவியல் ஆகிய பாடநெறிகளை இணையவழியில் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி நடவடிக்கையில் பொதுமக்களை ஏமாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதால், இது குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்றும், பொலிஸ் கணினிப் பிரிவில் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு நேர்ந்துள்ள கதி! முடிந்தால் காப்பாற்றுங்கள் - சட்டத்தரணி அதிர்ச்சித் தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |