ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட திட்டம் மோசடியானது: நாடாளுமன்ற உறுப்பினர் கடும் குற்றாச்சாட்டு
ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஒரு மோசடித் திட்டம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது எனவும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதில் நூறு சதவீத நம்பிக்கை உள்ளது என்றும், ஜனாதிபதித் தேர்தல் என்ற குறுகிய நோக்கத்துக்காக இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜி.எல்.பீரிஸ்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜி.எல்.பீரிஸ்,
“19வது திருத்தச் சட்டம் 2015ல் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை முரண்பாடுகள், பிரச்சனைகள் இல்லாத சரத்து அப்படியே உள்ளது.
எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், எக்காரணம் கொண்டும் இந்த முரண்பட்ட கதைகளை யாரும் சொல்லவில்லை.
ஜனாதிபதித் தேர்தல்
திடீரென, ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் போல் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
இது ஒரு பெரிய பிரச்சினை. மிக விரைவாக தீர்க்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து,.
விஜயதாச ராஜபாக்ச மிகவும் சரியாகவும் நியாயமாகவும் கூறினார். அந்தச் சூழலில், இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் ஒரு மோசடித் திட்டம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |