இலங்கையில் கோவிட் தடுப்பூசி கொள்வனவில் மோசடி! அரசாங்கம் விளக்கம்
இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்வது அவர்கள் என்பதால் இது தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.இந்த தடுப்பூசி 18 தொடக்கம் 40 டொலர்கள் வரை காணப்படுகின்றது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
உற்பத்தியாளர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அமையவே விலை தீர்மானிக்கப்படுகின்றன.அவர்களே தீர்மானிக்கின்றார்கள்.
உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டுன இதனை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஆகவே நிதி ஒதுக்கீட்டு முறைமையின் அடிப்படையிலேயே இந்த விலை நிர்ணயிக்கப்படுகின்றது.
நிதி ஒதுக்கீட்டு முறைமையை யாரும் சவாலுக்கு உட்படுத்தலாம். சில நாடுகள் 25 டொலர்களுக்கு இதனைப் பெற்றுக்கொண்டுள்ளன. ஆகவே இதனடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கப்படுகின்றது. கொள்முதல் செயற்பாட்டில் ஏதாவது பிரச்சினைக் காணப்பட்டால் இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கத்தால் பதிலளிக்க முடியாாது. இதற்கு சீனா அரசாங்கமே பதில் தர வேண்டும். 15 டொலர்களுக்கு இலங்கைக்கு வழங்கப்பட்டதா? இல்லாவிடின், இதில் மோசடிகள் ஏதும் இடம்பெற்றுள்ளதா? பங்களாதேஷஷுக்கு உண்மையில் 10 டொலர்களுக்குத்தான் வழங்கப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு சீன அரசாங்கமே பதில்தர வேண்டும். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு குறைந்த விலைக்கு கிடைத்துள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.