துறைமுகத்தில் தொடரும் மோசடி! ஆறு கொள்கலன்கள் இரகசியமாக விடுவிப்பு
துறைமுகத்தில் அண்மையில் தடுத்து வைக்கப்பட்டடிருந்த கொள்கலன்களில் ஆறு கொள்கலன்கள் மிக இரகசியமான முறையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அண்மையில் துறைமுகத்தில் 400 உப்பு கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
கொள்கலன்களின் உரிமையாளர்கள் விபரம்
உப்பு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட திகதிக்கு பின்னர் கொள்கலன்களில் ஏற்றப்பட்டவை என கருதியே இந்த கொள்கல்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
சுங்க அதிகாரிகளே குறித்த கொள்கலன்களை தடுத்து வைத்திருந்தனர். ஆனால் அந்த 400 கொள்கலன்களில் 6 கொள்கலன்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அந்த கொள்கலன்களின் உரிமையாளர்கள் விபரம் இதுவரை வெளியாகவில்லை.
எனினும் அரசாங்கத்துக்கு நெருக்கமான வர்த்தகர் ஒருவருடைய கொள்கலன்களே அவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக ஏனைய வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா




