இலங்கையின் பிரபல உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி: முகம் சுழிக்க வைக்கும் காணொளி (Video)
உலகின் பிரபல உணவு விற்பனை நிறுவனத்தின் இலங்கைக் கிளையொன்றில் கோழி இறைச்சித் துண்டுகளை வாங்கிய நபர் ஒருவர் மிக மோசமான அனுபவத்தினைப் பெற்றுள்ளார்.
அவர் வாங்கிய கோழி இறைச்சித் துண்டுகள் முழுமையாக சமைக்கப்படாமல், இரத்தத்துடன் காணப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடும் அதிருப்திக்கு உள்ளான அந்த நபர், முழுமையாக சமைக்கப்படாத கோழி இறைச்சித் துண்டுகளோடு குறித்த உணவகத்திற்குச் சென்று முறையிட்டுள்ளார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இதன்போது, கோழி இறைச்சித் துண்டுகள் முழுமையாக சமைக்கப்படாமல் இருப்பதுடன், அதில் இரத்தம் உள்ளதையும் உணவகத்தின் நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் காண்பித்துள்ளார்.
அத்துடன், குறித்த இறைச்சித் துண்டுகள் தனது பிள்ளைகளுக்காக வாங்கிச் சென்றது என்றும் அவர்கள் இதனை உண்டு நோய்வாய்ப்பட்டால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
