கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் மோசடி - ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் மோசடி வர்த்தகம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
டுபாயில் மறைந்திருந்த எத்தனோல் கடத்தலுடன் தொடர்புடைய வர்த்தகர் இலங்கை வந்த பின்னர் இராஜாங்க அமைச்சர் மற்றும் உறுப்பினரின் தலையீட்டில் எத்தனோல் கடத்தியுள்ளார்.
பிரபுக்களின் முனையம் ஊடாக இரகசியமாக எத்தனோல் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.எம் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அறிவிக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தீவிர விசாரணையின் பின்னர் அது தொடர்பான அறிக்கை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாமல் எப்படி ஜனாதிபதியாக முடியும்? - கோட்டாபய வழங்கிய உறுதி (பத்திரிக்கை கண்ணோட்டம்) |

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
