பிரான்ஸில் அதிகரிக்கும் வன்முறை - ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு
பிரான்ஸில், ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரான்ஸில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், இது மண்ணிக்கப்பட முடியாத குற்றம் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நாந்த்ரே பகுதியில் உள்ள சாலை ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து பொலிஸார் அந்த காரை சுற்றி வளைத்து சாரதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அந்த காரை ஓட்டிச் சென்ற ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த நேல் என்ற 17 வயது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து காருக்குள்ளேயே இறந்தார்.
இது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பொலிஸாரின் இந்த நடவடிக்கை பிரான்ஸ் நாட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகரிக்கும் வன்முறை
நாடு முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் வெடித்தது. கார்கள், பள்ளிகள், பொலிஸ் நிலையங்கள், குப்பைத்தொட்டிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல பகுதிகளில் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.
நேற்று இரவும் 3ஆவது நாளாக கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 40 கார்கள் சேதம் அடைந்தது. பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 170 பொலிஸார் காயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக பொலிசார் 180இற்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக 40 ஆயிரம் பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முக்கிய நகரங்களில் தீவிர சுற்றிவளைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வன்முறையை தடுக்க பரிஸ் புறநகர் பகுதியான கிளமார்ட் பகுதியில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பொதுமக்களின் போராட்டம்-வன்முறை சம்பவங்கள் நீடித்து வருவதால் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான் உயர் மட்ட குழுவை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் இம்மானுவேல் மக்ரான் கூறும் போது, சிறுவன் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். குற்றவாளி தண்டிக்கப்படுவார். பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும். பள்ளிகள், பொலிஸ் நிலையங்கள், குடியரசுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 12 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
