பிரித்தானியர்கள் தொடர்பில் பிரான்ஸ் எடுத்துள்ள முடிவு
பிரித்தானியாவிலிருந்து தமது நாட்டுக்கு பயணிப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை இன்று முதல் தளர்த்துவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள், பிரான்ஸூக்குள் நுழையவோ அல்லது வருகையின் பின்னர் தங்களை சுயதனிமைப்படுத்திக்கொள்ளவோ கட்டாய காரணம் அவசியமில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், அவர்கள் பிரித்தானியாவில் இருந்து வெளியேறுவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட,கோவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்று அவசியமாகும்.
அதேநேரம், தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள், பிரான்ஸூக்குள் நுழைவதற்கு கட்டாய காரணம் அவசியமாகும் என்பதுடன், வருகையின் பின்னர் அவர்கள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் பரவல் காரணமாக, கடந்த மாதம் 18ஆம் திகதி முதல் பிரான்ஸ் சில கட்டுப்பாடுகளை அமுலாக்கியது.
கோவிட்-19 பரவலுக்கு மத்தியில் பிரான்ஸ் போராடி வருகிறது.
நேற்றைய தினம் அங்கு 3 இலட்சத்து 68 ஆயிரத்து 817 பேருக்கு தொற்றுறுதியானதுடன், 341 மரணங்கள் பதிவானதாக ஜோன்ஸ் ஒப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.