பிரித்தானியாவிற்கு புலம்பெயரும் மக்கள்! பிரான்ஸ் விடுத்துள்ள கோரிக்கை
ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் புலம்பெயர்வோரை தடுப்பதற்கு கூடுதல் நிதியை தர வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது.
பிரான்ஸின் உள்துறை அமைச்சர் புருனோ ரெடிலியோ (Bruno Retailleau) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் கடலோரத்தில் பொலிஸாரின் ரோந்து பணியை அதிகரிக்கவே இந்த நிதி தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இழப்பீட்டு நிதி
அத்துடன், தற்போதைய பாதுகாப்பு படையணிக்கு மேலும் 175 பேர் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதுகாவலர்களின் எண்ணிக்கை 800ஆக அதிகரிக்க உள்ளது.

மேலும், புலம்பெயரும் மக்களால் ஏற்படும் சேதத்தை சரி செய்ய ஒரு இழப்பீட்டு நிதி உருவாக்கப்பட வேண்டும் என்றும் ரெடிலியோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில், இந்த ஆண்டு மட்டும் 35,040 புலம்பெயர்ந்தோர் பிரான்ஸிலிருந்து சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்குள் சென்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam