பிரான்சில் தாக்குதல்தாரியை சுட்டிப் பிடித்தது காவல்துறை
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்து மேலாக தீவிரமாக தேடப்பட்டு வந்த முன்னாள் படை உறுப்பினரான ஆயுததாரி இன்று பிற்பகலில் படுகாயப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை முதல் டொர்டோன் பகுதியில் பிரெஞ்சு பாதுப்பு தரப்பு பெரும் தலையிடியையும் அச்சத்தையும் ஏற்படுத்திய முன்னாள் இராணுவ உறுப்பினரான 29 வயதுடைய ரெறி டுபா இன்று பிற்பகலில் படையினர் எடுத்த தேடுதல் வேட்டையில் சுட்டு படுகாயப்படுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார் .
இந்த கைதுக்கு முன்னர் தன்னிடமிருந்த ஆயுதங்களால் அவர் படையினரை நோக்கி தாக்குதலை நடத்தியதால் இரண்டு தரப்புக்கும் இடையில் சிறிய துப்பாக்கித்தாக்குதல் சம்வம் இடம்பெற்றதான அறிவிக்கப்ட்டுள்ளது 2011 முதல் 2016 வரை பிரெஞ்சு இராணுவத்தில் காலாட்படை படைப்பிரிவில் பணியாற்றிய இவர் குடும்ப வன்முறைகள் காரணமாக நீதிமன்றத்தில் நான்கு முறை தண்டனைபெற்றவர்.
கடந்த சனியன்று கடுமையாக ஆயுதம் ஏந்தியிருந்தர் காவற்துறை அதிகாரி ஒருவரை காயப்படுத்திவிட்டு சுமார் 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செங்குத்தான, பாறைகள் மற்றும் மரங்கள் நிறைந்த காடொன்றுக்குள் தப்பிச்சென்றிருந்தார்.
இதனையடுத்து இவரது நிழற்படம் நாடளாவிய ரீதியில பகிரங்கப்படுத்தப்பட்டு நேற்று முதல், 300 க்கும் மேற்பட்ட படையினர் ஏழு கவச வாகனங்கள் மற்றும் ஏழு உலங்குவானூர்தியின் உதவியுடன் தீவிரமான தேடுதலை நடத்தி இன்று பிற்பகலில் தமது இலக்கை எட்டியுள்ளனர்.
படுகாயப்படுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இவர் அதன்பின்னர் தற்போது கடும் பாதுகாப்புடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam