உக்ரைன் அதிரடி! - ரஷ்ய படையின் மற்றுமொரு மூத்த அதிகாரி கொலை
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யாவின் நான்காவது மூத்த இராணுவ ஜெனரல் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் ஜனாதிபதியை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இராணுவ ஜெனரல் குறித்த தகவல்களை எதுவும் வெளியாகவில்லை.
உக்ரைன் மீது போர் தொடுத்த பின்னர் ரஷ்ய படைகளுக்கு தலைமை தாங்கியதாக நம்பப்படும் சுமார் 20 ரஷ்ய ஜெனரல்களில் ஐந்தில் ஒரு பங்கு இதுவரை போரில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் வேண்டுமென்றே உயர்மட்ட ரஷ்ய அதிகாரிகளை கொடிய சக்தியுடன் குறிவைக்கக்கூடும் என்று சில நிபுணர்கள் நம்புவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.