பொரளையில் பரபரப்பை ஏற்படுத்திய கைக்குண்டு - சிசிடிவியில் சிக்கிய சந்தேகநபர்கள்
பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் கைது செய்யப்பட்ட ‘வனாத்தே சத்து’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரின் நெருங்கிய சகா தட்சிண கப்புகே என்ற ராணாவிற்கு சொந்தமான வீட்டின் மீதே (23) நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் கண்டெடுப்பு
சந்தேகநபர் மோட்டார் சைசைக்கிளில் பிரவேசித்து கைக்குண்டை வீசிச் செல்லும் காட்சி அருகிலிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.

இதற்கமைய, குண்டுத்தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததற்காக பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
குண்டுத் தாக்குதலை நடத்தப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கொட்டிகாவத்தை பகுதியில் பொலிஸாரால் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் பதிவு எண் சிசிடிவி கமராவில் தெரியவந்ததையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில், மோட்டார் சைக்கிளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர், அதை அடகு வைத்ததாக கூறப்படும் அவரது சகோதரர், மற்றும் அடகு வாங்கியதாக கூறப்படும் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் அடங்குவதாக கூறப்படுகின்றது.
YOU MAY LIKE THIS VIDEO
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening