வீட்டில் இருந்து காணாமல் போன 2 வயது குழந்தை - கால்வாய் பாலத்தில் சடலமாக மீட்பு
அனுராதபுரம் - கல்நேவா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஓடும் கால்வாயில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று(23.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்வாயில் சிக்கியிருந்த குழந்தை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த குழந்தை வீட்டில் இல்லை என அதன் தந்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களும் கல்நேவா பொலிஸாரும் இணைந்து நேற்று (23.08.2026) பிற்பகல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, குழந்தை வசித்து வந்த வீட்டிற்கு அருகிலுள்ள ஓடும் கால்வாயில் அமைக்கப்பட்டிருந்த பாலம் ஒன்றில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி
இதையடுத்து, குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு கல்நேவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தையின் சடலம் கல்நேவா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்நேவா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO