டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : 76 அதிக அபாய பிரிவுகள் அடையாளம்
நாட்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் அதிகபட்ச டெங்கு பாதிப்பு எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 29,962 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் 21,533 டெங்கு நோயாளிகளும், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 டெங்கு நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தைச் சேர்ந்த
நாட்டில் பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளில் 52.93 சதவீதம், அதாவது 49,771 நோயாளிகள், மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தெற்கு மாகாணத்திலிருந்து 13,763 நோயாளிகளும், மத்திய மாகாணத்திலிருந்து 8,519 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட அளவில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 20,034 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 18,652 நோயாளிகளும், கொழும்பு மாநகர சபைப் பகுதியில் மட்டும் 3,787 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அபாயம் உள்ள சுகாதார மருத்துவ பிரிவுகள்
இதேபோல், கண்டி மாவட்டத்தில் 6,818 நோயாளிகளும், களுத்துறை மாவட்டத்தில் 6,093 நோயாளிகளும், காலி மாவட்டத்தில் 6,079 நோயாளிகளும், இரத்தினபுர மாவட்டத்தில் 5,160 நோயாளிகளும், மாத்தறை மாவட்டத்தில் 5,003 நோயாளிகளும், கேகாலை மாவட்டத்தில் 2,713 நோயாளிகளும், குருநாகல் மாவட்டத்தில் 2,651 நோயாளிகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2,510 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.

நாடு முழுவதும் 76 அதிக அபாயம் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிப் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் தவறாமல் சுத்தம் செய்யுமாறும், காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரிடம் உடனடியாக சிகிச்சை பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்திிிியுள்ளள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening