சித்தங்கேணி இளைஞன் கொலை வழக்கு: நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (24.11.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இளைஞனின் உயிரிழப்பு மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்திருந்தது.
இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருட்டுச் சம்பவம்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரினால் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவரான நாகராஜா அலெக்ஸ் என்பவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
