சண்டிலிப்பாயை சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி
யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தைக் கொத்தணியில் புதிதாக நால்வர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தெற்கிலுள்ள ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொற்றுக்குள்ளானவர்கள் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மருதனார்மடம் பொதுச்சந்தைக் கொத்தணி வீரியம் கூடியதாக காணப்படுவதாக அண்மையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam