மொனராகலையில் ஒரே இரவில் நால்வர் வெட்டிப் படுகொலை
மொனராகலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த கொடூர சம்பவங்களில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
பிபிலை நகரில் குடும்பப் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
உறவினர்களுக்கிடையிலான குடும்பத் தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழுக்களுக்கிடையில் மோதல்

அதேவேளை, பதல்கும்புர நகரில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு இடங்களில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர்களையும் தேடி வருகின்றனர்.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan