இரு வேறு குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அனுமதிg;பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த டிப்பர் வாகனம் இரண்டு கைப்பற்றப்ட்டுள்ளது.
அத்துடன், அதே பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றும் கைது செய்யப்பட்டதுடன், கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 25 லீட்டர் கசிப்பும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணமும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான சந்தேக நபர்கள் நான்கு பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடய பொருட்கள் எதிர்வரும் 15ஆம் திகதியன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
