வவுனியாவில் நால்வர் உயிரிழப்பு விவகாரம்! பிள்ளைகள் கழுத்து நெரித்து படுகொலை- உடற்கூறாய்வில் உறுதி

Vavuniya Sri Lanka Sri Lanka Police Investigation
By Rakesh Mar 09, 2023 10:00 PM GMT
Report

வவுனியாவில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தில் குழந்தைகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரு குழந்தைகளும் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் தந்தை, தாய் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டனர்.

வவுனியாவில் நால்வர் உயிரிழப்பு விவகாரம்! பிள்ளைகள் கழுத்து நெரித்து படுகொலை- உடற்கூறாய்வில் உறுதி | Four Members Of Same Family Death Vavuniya

இதன்போது சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது - 42), வரதராயினி (வயது - 36), மைத்ரா (வயது - 09), கேசரா (வயது - 03) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

குடும்பத் தலைவரான கௌசிகனின் சடலம் வீட்டின் விறாந்தைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன், அவரது மனைவி, பிள்ளைகள் படுக்கையில் தூங்கும் நிலையில் போர்வையால் நன்கு போர்த்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் நால்வர் உயிரிழப்பு விவகாரம்! பிள்ளைகள் கழுத்து நெரித்து படுகொலை- உடற்கூறாய்வில் உறுதி | Four Members Of Same Family Death Vavuniya

பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

இவ்வாறு உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு பரிசோதனை நேற்றும், இன்றும் நடைபெற்றது. அதன் முடிவில் இரு பிள்ளைகளும் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

கௌசிகனின் சடலத்தில் வேறு எந்தத் தடயங்களோ, காயங்களோ இல்லாத காரணத்தால் அவரது மரணம் தூக்கில் தொங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நால்வர் உயிரிழப்பு விவகாரம்! பிள்ளைகள் கழுத்து நெரித்து படுகொலை- உடற்கூறாய்வில் உறுதி | Four Members Of Same Family Death Vavuniya

மேலும், இரு குழந்தைகளினதும் தாயாரான வரதராயினியின் இறப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், அவரதும், கணவனான கௌசிகனதும் உடல் உறுப்பு மாதிரிகளும் குருதி மற்றும் சிறுநீர் மாதிரிகளும் மேலதிக ஆய்வுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கமைய, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடமிருந்து முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியினால் உறுதியான முடிவுக்கு வரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குடும்பத்தினர் கூண்டோடு இறப்பதற்கு முதல் இரவு, அதாவது திங்கட்கிழமை இரவு அந்த வீட்டுக்கு வந்து சென்றிருக்கின்றது என்று பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ள ஒரு ஹயஸ் வாகனம் பற்றிய விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வாகனத்தைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.



நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US