வவுனியா குடும்பத்திற்கு நடந்தது என்ன...! இரவில் வந்த மர்ம வாகனம் - வெளியான புதிய தகவல்

Sri Lanka Police Vavuniya Death
By Vethu Mar 09, 2023 08:30 AM GMT
Report

 வவுனியா, குட்ஷெட் தெருவில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் நேற்று வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் இடம்பெற்றன.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் நேற்றைய தினம் வெளியாகவில்லை.

தாமதமாகியுள்ள பிரேத பரிசோதனைகள்

சிவபாலசுந்தரம் கௌசிகன் என்ற 41 வயதுடைய நபர், அவரது மனைவி 36 வயதுடைய கௌசிகன் வரதராஜினி மற்றும் மகள்களான 09 வயதுடைய கௌசிகன் மைதிரா மற்றும் 03 வயதான கௌசிகன் கேசரா ஆகியோரின் சடலங்களுக்கே பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

வவுனியா குடும்பத்திற்கு நடந்தது என்ன...! இரவில் வந்த மர்ம வாகனம் - வெளியான புதிய தகவல் | What Happened To The Vavuniya Family

வைத்தியசாலையின் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் சடலங்களின் பிரேதப் பரிசோதனைகள் தாமதமாகியுள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.


வீட்டுத்தலைவர் கடனை செலுத்த முடியாத காரணத்தினால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதுதான் சரியான காரணம் என்று கூற முடியாது என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் வெளிநாட்டு முகவர் நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், மனைவி வவுனியா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார்.

வவுனியா குடும்பத்திற்கு நடந்தது என்ன...! இரவில் வந்த மர்ம வாகனம் - வெளியான புதிய தகவல் | What Happened To The Vavuniya Family

இதேவேளை உயிரிழந்தவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்த சம்பவ தினத்தன்று அந்த வீட்டுக்கு ஹயஸ் வாகனம் ஒன்று வந்து சென்றுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் அது தொடர்பாக பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US